வகைப்படுத்தப்படாத

‘அப்பா எனக்கு உதவுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்’ – உயிருக்கு போராடிய மகள் – [VIDEO]

(UDHAYAM, COLOMBO) – புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி தனது சிகிச்சைக்காக பணம் அளிக்க தந்தையிடம் கெஞ்சும் காணொளி, அவளது மரணத்திற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவிவருகிறது.

ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த 13 வயது ஷாய் ஸ்ரீக்கு எலும்பு வகையில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு சிகிச்சை பெற ரூ.40 லட்சம் தேவைப்பட்டது.

இதற்கு பணம் இல்லாததால் அவளது தாய் சுமா வீட்டை விற்று பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். எனினும் வீட்டை விற்கவும் அத் தந்தை அனுமதியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் தந்தை அரசியல் பலம் கொண்டவர் எனவும் அவர் ஒரு ரௌடி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவரது சிகிச்சைக்கு தேவையான பணத்தை தருவதாக கூறிய தந்தை பின்னர் அதனை தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ரௌடிகளின் உதவியுடன் சிறுமியையும், அவரது தாயையும் வீட்டை விட்டு விரட்டியுள்ளார்.

அவர்களுக்கு அயலவர்களே உதவிக் கரம் நீட்டியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 14ம் திகதி அந்த சிறுமி உயிரிழந்தார். மரணத்திற்கு முன் அவர் வெளியிட்ட காணொளி வேகமாக பரவி வருகின்றது.

அதில் “அப்பா எனக்கு உதவுங்கள் , என்னைக் காப்பாற்றுங்கள், இந்தக் காயங்கள் பொய்யானதில்லை, எனக்கு மற்றைய பிள்ளைகளுடன் விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

கேட்பவர்களின் நெஞ்சைக் கலங்கவைக்கும் இக்காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரது மரணத்தை விசாரிக்கவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

[ot-video][/ot-video]

Related posts

115 வருட பழைமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து

பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வாழ்த்து

Palali Airport to upgrade at a cost of Rs. 22 billion [VIDEO]