சூடான செய்திகள் 1

அப்துல் கலாமின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்; பொதுமக்கள், மாணவர்கள் அஞ்சலி

(UTVNEWS | COLOMBO) – முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இந்தியாவின் பல பகுதிகளில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

இராமேஸ்வரம்- பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கலாமின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் சிறப்பு தொழுகையும் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வுகளின் பின்னர் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதுவரை 1 கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் வருகை தந்து அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திச் சென்றதுடன், இங்கு அமைக்கப்பட்டுள்ள கலாமின் வாழ்க்கை வரலாற்றுக் காட்சிக் கூடம், அவர் உருவாக்கிய விண்வெளி சாதனங்கள், அவர் பெற்ற விருதுகள் ஆகியவற்றையும் கண்டு மகிழ்ந்து செல்கின்றனர்.

Related posts

இன்று அரச விடுமுறை

புத்தளம் – மன்னார் பிரதான வீதியில் வெள்ளம்

நேற்று இரவு மைத்திரி – மஹிந்த விசேட சந்திப்பு