உள்நாடு

அபேகுணவர்தன மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) –பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக சொத்துக்களை கையகப்படுத்தியது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது, இதன்போது அரசு தரப்பு சார்பாக சாட்சிகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதிபதி விசாரணையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

2004 முதல் 2006 வரை 41.2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக அபேகுணவர்தன மீது குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்து ராணி உலகை விட்டும் பிரிந்தார்

கோபா குழுவின் தலைவராக திஸ்ஸ விதாரண

குடிநீர் முகாமைத்துவத்துக்காக தனி செயலகம் – ஜீவன் தொண்டமான் விளக்கம்.