கேளிக்கை

அபிராமி கணவருக்கு முக்கிய பதவி கொடுத்த ரஜினிகாந்த்

(UTV|INDIA)-சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமியின் கணவர் விஜய்யை நேரில் அழைத்த ரஜினிகாந்த் அவருக்கு ஆறுதல் தெரிவித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய பொறுப்பு ஒன்றை விஜய்க்கு ரஜினிகாந்த் வழங்கியுள்ளார்.

சென்னை குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் அபிராமிக்கு அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. கள்ளக்காதலனுடன் ஓடிப்போக தயாரான அபிராமி, கணவரையும் குழந்தைகளையும் கொலை செய்ய முயற்சித்தார். இந்த முயற்சியில் கணவர் மட்டும் தப்பிக்க இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் அபிராமியை கைது செய்து சிறையில்  அடைத்தனர்.

இரண்டு குழந்தைகளின் மறைவால் அதிர்ச்சியுற்று இருந்த விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் ஆறுதல் தெரிவித்தார். மேலும் குன்றத்தூர் ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணியின் இணைசெயலாளர் என்ற பதவியையும் அவர் விஜய்க்கு அளித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

10ம் திகதி அஜித்தின் விஸ்வாசம் படம் ரிலீஸ் இல்லை?

சமூக திரில்லராக ‘புளூவேல்’