(UDHAYAM, COLOMBO) – அனைவரையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தை ஊடாக நாட்டை முன்னேற்ற எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு மக்களின் ஆதரவு அவசியமாகும் என்றும் பிரதமர் கூறினார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 1917ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சியின் 100 வருட நிறைவாண்டு வைபவத்தில் பிரதமர் உரையாற்றினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளை தீர்ப்பதும் ஒரு வகையான புரட்சியே என்று; சுட்டிக்காட்டிய பிரதமர் , நாடு பற்றி சிந்தித்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசியல்வாதிகளே இன்று நாட்டுக்கு தேவைப்படுவதாகவும் கூறினார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில்: ஒக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து உலகில் பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்ட.ன. அனைத்து துறைகளுக்கும் இந்த புரட்சி தாக்கம் செலுத்தியது. இலங்கையில் கடந்த காலங்களில் இரண்டு புரட்சிகள் இடம்பெற்றதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவிக்கு நியமித்தமையும், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியவை இணைந்து அரசாங்கம் அமைத்தமையும் அந்த இரண்டு புரட்சிகளாகும் என்று .பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.