உள்நாடு

அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்

(UTV | கொழும்பு)- 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் 24 மணிநேரமும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கவனம் செலுத்தியுள்ளார்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சுபீட்சமான எதிர்காலம் என்ற ஜனாதிபதியின் கெள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைவருக்கும் குடிநீர் என்ற திட்டம் குறித்து ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் 47 இலட்சம் குடும்பங்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக்கொள்ள ஆறுகள் மற்றும் நீர் நிலைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் நீர் பெற்றுக்கொள்ளும் கிணறுகளை சுத்தப்படுத்தி பாதுகாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நீர் விநியோகத்தின் போது, சாலைகளில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும், அதிக செலவீனங்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

தேவைக்கேற்ப எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் மின்வெட்டு இல்லை

வடக்கின் கடற்பரப்பை கண்காணிக்க உருவாகின்றது “கடல் சாரணர் படையணி” – அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

அவைத் தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த