உள்நாடு

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது எவ்வித உற்சவ நிகழ்வுளையும் நடத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அணிவகுப்புகள் மற்றும் குதிரைப்படை அணிவகுப்புகள் நடத்தப்படாது என்றும் பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் ஜனாதிபதியை வரவேற்க மட்டுமே ஜெயமங்கள பாடல்கள் பாடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரினால் வர்த்தமானியில் பெயர் வௌியிடப்பட்ட 223 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தொண்டமான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் அனுதாபம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய Three Phase Power அகற்றம்

editor

குருநாகல் மேயரை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை