உள்நாடு

அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகள் இன்று முதல் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று (25) முதல் ஆரம்பமாகின்றன.

இதற்கான சுகாதார வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் சீருடையில் பாடசாலைக்கு செல்வது கட்டாயம் இல்லை எனக் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாகப் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறானதொரு சூழலில் பெரும்பாலான மாணவர்களின் சீருடைகள் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பொருத்தமான ஆடைகளை அணிந்து மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம்

 ரணில், சஜித் இணைய வேண்டும் – வடிவேல் சுரேஷ்

சஜித் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால் ஆதரவளிக்க நாம் தயார்