உள்நாடு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது இன்று பாராளுமன்றத்திற்கு அருகில் இரவைக் கழிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) –  அரசுக்கு எதிராக தாம் இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மற்றுமொரு அங்கமாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது இன்று பாராளுமன்றத்திற்கு அருகில் இரவைக் கழிக்க தீர்மானித்துள்ளார்.

“நீங்கள் அங்கு அருகில் இருந்தால், சென்று சேருங்கள். அவர்களுக்கு உணவும் பானமும் கொடுங்கள். அவர்களுக்கு பலமாக இருங்கள். போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” என சமூக வலைதளங்களில் ஆதரவு வலுக்கின்றது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டதனை தொடர்ந்து பொலிசாரினால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிலிப்பைன்ஸில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இதுவரை 426 கடற்படையினர் குணமடைந்தனர்

பிரேமலால் உள்ளிட்ட மூவரை குற்றமற்றவர்களாகக் கருதி விடுதலை