உள்நாடு

அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி

(UTV|கொழும்பு) – இலங்கையின் 72 வது சுதந்திர தினம் நாளை(04) கொழும்பு சுதந்திர தின சதுக்கத்தில் கொண்டாடப்படவுள்ளது.

இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ‘பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாடு’ என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள. ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோர் பங்கேற்கும் விசேட சமய வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினத்திற்கான பௌத்த சமய வழிபாடுகள் கொள்ளுப்பிட்டி தர்மகீர்த்தியா ராம விகாரையில் நாளை காலை இடம்பெறவுள்ளன. இதில் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நாளை கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல்

தனியார் தாங்கி உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பிற்கு IOC ஆதரவு

தொலைபேசிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை !