உள்நாடு

அனைத்து சிறைச்சாலைகளும் PCR பரிசோதனைக்கு தயார் நிலையில்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையினைக் கருத்திற் கொண்டு சிறைச்சாலைகளில் நோய் தொற்று பரவுவதை தடுக்கும் முகமாகவும், சிறைச்சாலைக்குள் நோய் பரவலை தடுக்கவும் தேவையான முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ,மற்றும் சிறைக்கைதிகள் புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இனால் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்பாராவிதமாக பீசீஆர் (PCR) பரிசோதனை செய்ய தேவையேற்படின் எச்சந்தர்ப்பத்திலும் அதற்கும் தயாராகி இருக்கவும், எந்தவொரு நிலையிலும் அதற்கு முகங்கொடுக்கவும் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்பினை பெற்றுத் தருவதாகவும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இலங்கையில் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக்கைதிகள் எதிர்பாராவிதமாக PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் அதில் கொவிட் தொற்றாளர் இனங்காணப்பட்டால் சிறைச்சாலையில் தொற்று பரவாமல் இருக்க அவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் விசேட வேலைத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த எதிர்பாரா PCR பரிசோதனை சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில், இலங்கையில் அனைத்து சிறைச்சாலைகளிலும் வெளியாளர்களுக்கான உள்நுழைவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலையினுள் தொற்று பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பதே எமது திட்டம் எனவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • ஆர்.ரிஷ்மா

Related posts

காற்றில் பிளாஸ்டிக் துகள்களின் செறிவு அதிகரிப்பு

சுமந்திரன் போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் – மன்னாரில் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் தேர்தல் பிரசாரம்

editor

பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கைது