உள்நாடு

‘அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும்’

(UTV | கொழும்பு) –  இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.

பிரதமர் உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் குழு இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தந்ததுடன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை போக்க ஒவ்வொரு கட்சியும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்; அவ்வாறானதொரு அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு ஜனாதிபதி அனைத்து தரப்பினரையும் அழைத்துள்ளதாக பிரதமர் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய பூங்காவிற்குள் தனியார் வாகனங்கள் நுழைய தடை

சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

செவ்வாய் முதல் மின்சக்தி அமைச்சராக டலஸ் இல்லை – டலஸ்