உள்நாடு

அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு – 13 நடைமுறையா?

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம், எதிர்வரும் புதன்கிழமை (26) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாகவும் அரசியல் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குதல் போன்றவை குறித்து அங்கு விவாதிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அவர் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் 13ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும் முழுமையான அதிகாரப் பிரிவினைக்கு இணங்கினால் மட்டுமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

வீடியோ

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீண்டும் பானுக இலங்கை அணியில்

உடன் அமுலாகும் வகையில் கிராண்ட்பாஸ் முடக்கம்

கானியா பெனிஸ்டருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்