கேளிக்கை

அனுஷ்காவுடன் திருமணமா?

(UTV|INDIA)-அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. 2005-ல் சினிமாவுக்கு வந்த அவர் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பெரிய ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்தார். கடைசியாக வந்த பாகுமதி படத்துக்கு பிறகு புதிய படங்கள் அவருக்கு இல்லை. வயதானதால் டைரக்டர்கள் ஒதுக்குவதாகவும் இளம் கதாநாயகர்கள் ஜோடி சேர மறுப்பதாகவும் கூறுகின்றனர்.

இதனால் அவருக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்ப்பதாக கூறப்பட்டது. அனுஷ்காவும் தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்தபோதே இந்த பேச்சு கிளம்பியது. ஆனால் இருவரும் அதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்தனர்.

படம் திரைக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்ள இருவரும் தயாராகி விட்டதாக கூறப்பட்டது. அனுஷ்கா கோவில்களுக்கு சென்று பூஜை, வழிபாடுகள் செய்து வருகிறார்.

இந்த நிலையில் திருமணம் பற்றிய செய்திக்கு அனுஷ்கா சமீபத்தில் விளக்கம் அளித்தார். நானும் பிரபாசும் பாகுபலியில் ஜோடியாக நடித்தோம். திரைக்கு வெளியே நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம். வேறு எதுவும் இல்லை.” என்றார்.

பிரபாசும் தற்போது காதல் கிசுகிசுவுக்கு பதில் அளித்துள்ளார். “என்னையும் அனுஷ்காவையும் இணைத்து பேசி வருகின்றனர். எங்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள். எனது சொந்த வாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேச விரும்பவில்லை. எனக்கு திருமணம் நடக்கும்போது அதை வெளிப்படையாக அறிவிப்பேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சிம்பு இனி படங்களில் நடிக்க கூடாது!

ரஜினிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

டாப்ஸி தயாரிப்பில் ‘சமந்தா’