வகைப்படுத்தப்படாத

அனுர சேனாநாயக்க வீடு திரும்பினார்

(UDHAYAM, COLOMBO) – சுமார் ஒருவருட காலத்திற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க பிணை பெற்று இன்று வௌியேறினார்.

கடந்த 02ம் திகதி மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட நிலையில் , இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொக்சி முன்னிலையில் பிணை நிபந்தனைகளை கூறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிணையில் அனுர சேனாநாயக்கவின் மகன் , சகோதரன் மற்றும் உறவினரொருவர் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

மேலும் , எதிர்வரும் 15ம் திகதி அவர் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“Baby Driver 2” could happen fairly soon

නිවසේ දීම ස්වයංක්‍රීයව ක්‍රියාත්මක කළ හැකි කාන්දුපෙරණ යන්ත්‍රයක්

லண்டனில் மற்றுமொரு தாக்குதல்