உள்நாடுசூடான செய்திகள் 1

அனுர குமாரவுக்கு மதமில்லை: நான் கட்டிய நூலை தரையில் வீசினார்

(UTV | கொழும்பு) –

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் ஒரு நாள் தனது விகாரைக்கு வந்தார் என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குணுவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள வலைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய போட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

அப்போது அவருக்கு ஆசி வழங்கி, பிரித் நூலை கட்டி விட்டு, சிறப்பாக நாட்டை ஆட்சி செய்யுமாறு ஆலோசனை வழங்கினேன். எனினும் விகாரையில் இருந்து வெளியேறிய அனுரகுமார, நான் அவரது கையில் கட்டிய பிரித் நூலை கழற்றி தரையில் வீசினார்.

இதனை கண்ட எனது மாணவர்களான இளம் பிக்குகள்,எனது வாகன சாரதி ஆகியோர் சம்பவம் குறித்து என்னிடம் தெரிவித்தனர். அவர்கள் மாயவாதிகள்,அவர்களுக்கு மதமோ, அறமோ கிடையாது அவர்களை கணக்கில் எடுக்க வேண்டாம் நான் அவர்களிடம் கூறினேன்.அத்துடன் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச,மகிந்த ராஜபக்ச உட்பட எந்த அரசியல்வாதிகள் எனது விகாரைக்கு வந்தாலும் அவர்களை ஆசிர்வதித்து பிரித் நூலை கட்டப்போவதில்லை.

அரசியல்வாதிகள் வழங்கும் தானங்களையும் ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் வலவாஹெங்குணுவெவே தம்மரதன தேரர் கூறியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன, மத அடிப்படையில் தேர்தல் பணிகளை நடத்தமாட்டேன் – ஜனாதிபதி ரணில்

editor

தேர்தல் முடிவுகளைப் போன்றே கொவிட் முடிவுகளும் வெளியாகின்றன

வாகன விபத்தில் உப பொலிஸ் அதிகாரி பலி