அரசியல்

அனுரவின் கூட்டங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக அவர் கலந்து கொள்கின்ற கூட்டங்களில் சோலர் பொருத்தப்பட்ட சிசிடிவி கெமரா மற்றும் இதர நவீன தன்னியக்க சிசிடிவி கெமராக்கள் பல ஆங்காங்கே பொருத்தப்பட்டு கூட்டங்களுக்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் நேற்று (12) காரைத்தீவு மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கூட்ட மேடைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவ்வாறான கெமராக்கள் பல பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை என்றும் இல்லாதவாறு கூட்டங்களுக்கு பைகளுடன் சமூகமளிப்பவர்கள் அழைக்கப்பட்டு விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கூட்டங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

Related posts

மலேசியாவின் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்.

இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில் முனைவோரிடம் ஜனாதிபதி அநுர கோரிக்கை

editor

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார்.

editor