உள்நாடு

அனுமதியை வழங்குவதா? இல்லையா? – இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கு மின்சார துண்டிப்பு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்சார துண்டிப்புக்கான அனுமதியை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மின் நுகர்வை குறைக்க வேண்டும். நாளொன்றுக்கு 300 மெகாவோட் மின்சாரத்தைக் குறைக்க முடியுமாயின், இலக்கை நோக்கிப் பயணிக்க முடியும்.

எனவே, மின்சாரத்தை தடையின்றி விநியோகிக்க வேண்டுமாயின், பொதுமக்களும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் இந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் நடந்தது போன்று பாகிஸ்தானிலும் நடக்கும் – இம்ரான் கான்

உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக இலங்கை மாறும்-வஜிர

மறு அறிவித்தல் வரை காலி மாவட்டத்திற்கான அறிவிப்பு