சூடான செய்திகள் 1

அனுமதிப் பத்திரமற்ற மாகாண பயணிகள் பேரூந்துகளுக்கான அபராதத்தை அதிகரிக்கத் தீர்மானம்

(UTV|COLOMBO) – அனுமதிப் பத்திரமின்றி பயணிக்கும் மாகாண பயணிகள் பேரூந்துகளுக்கு விதிக்கப்பட்ட 2 இலட்சம் ரூபா அபராதத் தொகையை தற்போது 5 இலட்சமாக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாராச்சி தெரிவித்துள்ளார்.

அனுமதிப் பத்திரமின்றி நூற்றுக்கும் அதிகமான பேரூந்துகள் போக்குவரத்தில் ஈடுபடுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு அனுமதிப் பத்திரங்களின்றி பயணிக்கும் பேரூந்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதால், அபராத தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்தாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

“ஆசிரியர்களை மனம்போன போக்கில் இடமாற்றஞ் செய்து கல்வி நடவடிக்கைகளை பாழாக்காதீர்கள்”

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

பியூமி ஹன்சமாலி மீது குற்றம் சுமத்திய அமைப்பொன்றின் தலைவர் கைது!