உள்நாடு

அனல் மின்நிலைய ஊழல் ஊடாக டாலர்களைப் பகிர்ந்து கொள்ளவா அரசு அனைத்துக் கட்சிகளையும் அழைக்கிறது?

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலைய ஊழலின் ஊடாக பெறப்பட்ட டொலர்களை அனைத்துக் கட்சி அரசாங்கங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்து மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்களை சிரமத்திற்கு உள்ளாக்குகிறார்களா என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவித்து வருகின்ற நிலையிலும் அரசாங்கம் இவ்வாறான மோசடிகளை மேற்கொண்டு நாட்டை மேலும் குன்றின் கீழ் இழுக்கும் வகையில் செயற்படுகின்றது என எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

மின் கட்டண உயர்வை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (29) பாராளுமன்றத்திற்கு முன்பாக மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் கைது

ஏப்ரல் 11,12 – பொது விடுமுறை தினங்களாக அறிவிப்பு

சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம்.

editor