அரசியல்உள்நாடு

அனர்த்த முன்னாயத்தம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி நேரில் ஆய்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை பெய்து வருகின்ற இந்நிலையில், கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரம்படித்தீவு, சந்திவெளி, திகிலிவெட்டை, புலிபாய்ந்தகல், மற்றும் சாராவெளி போன்ற கிராம மக்கள் ஏதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதேச செயலாளர், மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை நேரில் சென்று ஆராய்ந்து கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இதன்போது, அப்பகுதி மக்களின் தரைவழிப் போக்குவரத்து வெள்ளத்தினால் முற்றாகத் தடைப்பட்டுள்ளதால், படகுப்பாதை மூலமான போக்குவரத்து, மற்றும் அப்பகுதி மக்கள் இடம்பெயரும் போது அதற்குரிய முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி பாராளுமன்ற உறுப்பினரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான எதுவிதமான யோசனையும் கிடையாது

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுட்டுக்கொலை.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்