வகைப்படுத்தப்படாத

அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்வு

(UDHAYAM, COLOMBO) – வெள்ளம் மற்றும் மண்சிரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்வடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

காணாமல் போனோரின் எண்ணிக்கை 91 மற்றும் காயமடைந்தோர் 72 பேர் ஆகும்.

களுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை மாவட்டங்களில் அதிகளவிலானோர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

6 லட்சத்து 98 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

225 நலன்புரி நிலையங்களில் 25 ஆயிரத்து 245 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியான நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/toda_y_update.jpg”]

Related posts

உலகில் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் 14 வது இடத்தில் இந்தியா

நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் தெரேசா மே வெற்றி

முப்பதாயிரம் உலக வரைப்படங்களை அழித்த சீனா…