உள்நாடு

அனர்த்தத்தை குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தல்

(UTV|கொழும்பு)- தீர்மானமிக்க எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் புதுவருடத்தில் பொறுப்புடன் செயற்பட்டு, நாடு முகங்கொடுத்துள்ள அபாயத்தை குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார் .

குறிப்பாக புதுவருட நிகழ்வுகளை வீட்டிலிருந்தே மேற்கொள்ளுமாறும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.

பொறுப்புடன் ஒவ்வொருவரும் செயல்படும் பட்சத்தில் கொரொனா வைரஸ் பிடியில் இருந்து விடுபட்டு பிரச்சினை இல்லாமல் எதிர்காலத்தில் பயணிக்க முடியும் எனவும் இல்லையேல், பல இக்கட்டான நிலைமைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டின் எதிர்காலம் தொடர்பில் மிக முக்கிய பொறுப்பு பொதுமக்களிடம் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பம்

அபேகுணவர்தன மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு