வகைப்படுத்தப்படாத

அனர்த்தத்திற்கு உள்ளாகும் பகுதிகளை வரைபடமாக்கும் பணிகள் காலியில் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – காலி மாவட்டத்தில் அடிக்கடி அனர்த்தத்திற்கு உள்ளாகும் கிராம சேவகர் பிரவுகளை வரைபடமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி மாவட்ட உதவிப் பணிப்பாளர் கேணல் தம்பத் ரத்னாயக்க இது தொடர்பாக  தெரிவிக்கையில்  மாவட்டத்திலுள்ள 846 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 473 பிரிவுகள் அடிக்கடி அனர்த்தத்திற்கு உள்ளாவதாகதெரிவித்தார்.

யக்கலமுல்ல மற்றும் ஹிக்கடுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகளும் அனர்த்தத்திற்கு உள்ளாகின்றன. எனினும், கரந்தெனிய பிரதேச செயலகப் பிரிவில் எந்தவொரு கிராம சேவகர் பிரிவும் அனர்;த்தத்திற்கு உள்ளாவதில்லை.

இவ்வாறு அனர்த்தத்திற்கு உள்ளாகாத பிரிவுகளை வரைபடமாக்கும் பணிகள் பின்னர் மேற்கொள்ளப்படும்.

Related posts

அமெரிக்க நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

Met. forecasts showers in several areas

තැපැල් වර්ජනය තවදුරටත්