உள்நாடு

அநுராதபுர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி மூவர் காயம்

(UTV| கொழும்பு) – அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றுவரும் பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் சம்பவத்தில் மேலும் 3 கைதிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (21) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் என சந்தேகிக்கும் கைதி ஒருவர் சில தினங்களுக்கு முன் குறித்த சிறைச்சாலையில் இனங்காணப்பட்டு அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சிறைக் கைதிகள் இன்று அமைதியற்ற விதத்தில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவை

editor

கொரோனா தொற்று : ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே

ரஞ்சித் பேஜ், “Children of Gaza Fund” நிதியத்திற்கு 3 மில்லியன் ஜனாதிபதியிடம் அன்பளிப்பு