அரசியல்உள்நாடு

அநுரகுமாரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணிலின் வேலைத்திட்டங்களே உள்ளடக்கம் – அகிலவிராஜ்

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களே காணப்படுகின்றன. ஒருசில சிறிய வித்தியாசத்துடனே அதனை  வெளியிட்டுள்ளனர். அவர்களின் வாக்குறுதிகளை யதார்த்தமாக்குவது சாதாரண வியடமல்ல என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகமான திட்டங்கள் ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களாகும். அந்த திட்டங்களில் ஒருசில விடயங்களை ஏற்கனவே ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்திருக்கிறார்.

என்றாலும் ஒருசில மாற்றங்களை செய்துள்ளனர். அதேநேரம் அவர்களின் ஒருசில வாக்குறுதிகளை இந்த பூமியில் யதார்த்தமாக்குவது தற்போதைக்கு சாத்தியமில்லை.

அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்வி தொடர்பில் சில விடயங்களை குறிப்பிட்டுள்ளார்கள். 3 கிலாே மீட்டருக்கு ஒரு பாடசாலை அமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அன்று நான் கல்வி அமைச்சராக இருந்து செயற்படுத்திய அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தையே இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதில் புதிய விடயம் ஒன்றும் இல்லை.

மேலும் கல்விக்கு 6 வீதம் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனை செயற்படுத்த முடியும் என்றால் நல்லது. ஆனால் இந்த பணத்தை எவ்வாறு தேடிக்கொள்வது என்ற விடயங்கள் எதுவும் இல்லை. அதனை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை.

அதனைவிட பாரிய பிரச்சினைகள்  இந்த நாட்டில் இருக்கின்றன. அவர்களிடம் முறையான முகாமைத்துவ நடவடிக்கை இருப்பதையும் காணக்கூடியதாக இல்லை. பணம் தேடிக்கொள்ளவதற்கான முறை ஒன்றும் அவர்களிடம் காணக்கூடியதாக இல்லை.

அலகான நகைச்சுவை கதைகளை சொல்ல முடியும். வாக்குறுதிகளை வழங்க முடியும். ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவது சாதாரண விடயமல்ல

ரணில் விக்ரமசிங்க அன்று கல்வி அமைச்சர் என்றவகையில் அவருக்கு கல்விக்கொள்கை திட்டத்தை செயற்படுத்த இடமளிக்க வில்லை. அவற்றை செயற்படுத்த அன்று இடமளித்திருந்தால், இன்று எமது நாடு வளங்கள் நிறைந்த தேசமாக இருந்திருக்கும்.

அதனை தடுத்தவர்கள் யார் என்பது இந்த நாட்டு மக்களுக்கு தெரியும். அதனால் அனுபவத்துடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும். எமது நாடடில் அரசியல் பிரச்சினை இல்லை.பொருளாதார பிரச்சினையே இருக்கிறது.

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண ரணில்  விக்ரமசிங்கவுக்கு மாத்திரமே முடியும். அனுபவமில்லாதவர்களுக்கு அதிகாரத்தை வழங்கினால் நாடுக்கு என்ன நடக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை குழாம்

ஜூன் 15 : பாரிய தொழிற்சங்க நடவடிக்கை

வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு!