வணிகம்

அத்தியாவசிய பொருட்களுடன் IDH மருத்துவனை ஊழியர்களின் வீடுகளுக்குச் சென்றது Kapruka

(UTV | கொழும்பு) – நாட்டின் இணையதளத்தின் ஊடான வர்த்தக நடவடிக்கைகள் துறையில் (E-commerce) முன்னோடி நிறுவனமான கப்றுக நிறுவனம் கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக முக்கியமான ஒத்துழைப்பை வழங்கும் முகமாக IDH  மருத்துவமனையில் கடமையாற்றும் 600க்கும் அதிகமான ஊழியர்களுக்காக புதுவருடத்தின் போது அவர்களது வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை அன்பளிப்பாக வழங்க நடவடிக்கை எடுத்தது.

கொவிட்-19 வைரஸூடன் நேரடியாக போராடி வரும் மருத்துவமனை ஊழியர்கள் செய்யும் தேசிய பொறுப்புணர்வை வரவேற்கும் முகமாக இந்த அன்பளிப்பை அவர்களது வீடுகளுக்குச் சென்று ஒப்படைப்பதற்கு கப்றுக நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இந்த வேலைத்திட்டத்துக்காக கப்றுக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துலித் ஹேரத், பிரதான விற்பனை அதிகாரி லலித் சீ பெரேரா, நடவடிக்கைகள் பணிப்பாளர் அலெக்ஸாண்டர் சிவகுமார் மற்றும் விற்பனை முகாமையாளர் சுரேஷ் எரந்த ஆகியோர் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் IDH மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் அசித்த அத்தநாயக்க, பிரதி பணிப்பாளர் டொக்டர் சின்த வீரசூரிய மற்றும் உடலியல் நோய் நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த சவால் நிறைந்த நிலைமையில் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தமது துறையில் பெற்றுக் கொடுக்கக் கூடிய உச்ச அளவு ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பது மற்றும் கொவிட்-19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியிலுள்ள குழுவினருக்காக தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு கப்றுக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை மூலம் இலங்கைக்கு 5 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜப்பான், அபிவிருத்தித் திட்டங்களுக்காக 4 பில்லியன் ரூபா நிதியுதவி