உள்நாடு

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்

(UTV | கொழும்பு) – வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு இன்று அலரி மாளிகையில் கூடவுள்ளது.

பால்மா விலையை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமையல் எரிவாயு, அரிசி, சீமெந்து மற்றும் கோதுமை மா என்பன தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இதேநேரம், கட்டுப்பாட்டு விலையை விடவும், அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிரான புதிய அபராதத் தொகை அறவீடு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிநாடுகளுக்கு வீட்டுப் பராமரிப்பு உதவியாளர் பதவிக்காக முதன்முறையாக வெளிநாடு செல்லும் பெண்களுக்கான அறிவிப்பு

குர்-ஆனை பாவிப்பது தொடர்பில் அரசு கொண்டுவரும் புதிய சட்டம்!

G20 நாடுகள் வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கை