வணிகம்

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவு உள்நாட்டு சந்தைகளில் கிடைக்காமை காரணமாக அவற்றின் விலைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

மஞ்சள், கௌபி, உளுந்து, குரக்கன் உள்ளிட்ட மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளன.

அதேநேரம் அரிசிக்கான நிர்ணய விலை அரசாங்கம் நிர்ணயித்துள்ள போதும், சந்தைகளில் அந்த விலைக்கு கிடைக்கப்பெறுவதில்லை எனவும் நுகர்வோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related posts

மத்திய நெடுஞ்சாலைக்கு தேசிய வங்கிகளிடம் இருந்து ரூ. 60 பில்லியன் கடன்

இலங்கையின் நகரங்களது நிலவரம்

சீமெந்தின் விலையும் அதிகரிப்பு