வணிகம்

அத்தியாவசிய பொருட்களது விலை குறைப்பு

(UTV | கொழும்பு) – பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவும் 12 அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய 1000 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

இதேவேளை 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

அரிசியின் விலையில் தளம்பல் நிலை ஏற்படுவதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. புத்தாண்டு காலத்தில் நாட்டு மக்களுக்கு நிவாரண விலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட ஆலோசனை வழங்கியுள்ளார்.

சிறு மற்றும் மொத்த உற்பத்தியாளர்களிடமிருந்து அத்தியாவசிய உணவு பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்யும் புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

விலை மனுகோரல் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யாமல், கையிருப்பின் அடிப்படையில் பொருட்களை கொள்வனவு செய்யும் வழிமுறை தற்போது செயற்படுத்தப்படுகிறது.

Related posts

HNB உடன் கூட்டணி ஒன்றை கச்சாத்திட்டுள்ள கண்டி திரித்துவக் கல்லூரி

நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குறுத்த நடவடிக்கை

உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அனுமதிப்பத்திரம் இரத்து