உள்நாடுவணிகம்

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

(UTV | கொழும்பு) –

லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களை குறைந்த லிலையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருகிறது. ஒரு கிலோ சோயா மீட் 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 580 ரூபாவாகும்.

* ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கு 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 290 ரூபாவாகும்.

* ஒரு கிலோ நெத்தலிக் கருவாடு 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1,100 ரூபாவாகும்.

* ஒரு கிலோ வெள்ளைப் பூண்டு 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, புதிய விலை 620 ரூபாவாகும்.

* ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 195 ரூபாவாகும்.

* சிவப்பு பருப்பு 6 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாளை முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

நாட்டின் சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர்வெட்டு

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் 8 பேர் அடையாளம்