உள்நாடு

பிரச்சினைகளை முன்வைக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTV|கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையில் ,பொதுமக்கள்; எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு தீர்வை வழங்கக்கூடிய வகையில் ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக பொறிமுறையொன்றை அரசாங்கம் அமைத்துள்ளது.

அவசர நிலமையின் அடிப்படையில் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள எதிர்பாராத நிலைமையில் செயல்படும் போது ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் கீழ் உடனடியாக குறைகளை போக்கி நிவாரணம் வழங்குவதற்காக இந்த பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைவாக நாளாந்தம் பொதுமக்களின் வாழ்க்கையில்; எதிர்கொள்ளப்படும் சிரமங்களுக்கு தேவையான ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக கீழ்கண்ட தொலைபேசி இலக்கத்தினுடாகவும் தமது பிரச்சினைகளை முன்வைக்குமாறு அரச நிர்வாகம் , உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு பொதுமக்களுக்கு தயவுடன் அறிவித்துக்கொள்கின்றது.

தொலைபேசி இலக்கங்கள்

076 0390 981
071 250 0031
076 0390 437
076 652 8068
076 6527 589
076 039 0564

076 0390 732
076 039 1461
076 0390 563
076 039 0752
076 0390 754

Related posts

சபாநாயகருக்கு கொவிட் தொற்று

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் : CCD இற்கு பிறப்பித்துள்ள உத்தரவு

யானா கமகேவின் நாடாளுமன்ற ஆசனம் தொடர்பில் தீர்ப்பு இன்று!