உள்நாடு

அத்தியவாசிய சேவையில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது

(UTVNEWS | MANNAR) –மன்னாரில் இருந்து கொழும்பிற்கு கடல் உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற கூலர் ரக வாகனம் குறித்த பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் மன்னார் நோக்கி வந்துள்ளது.

இதன் போது மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து நேற்று இரவு 11.20 மணியளவில் குறித்த கூலர் வாகனம் இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

குறித்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 65.9 கிராம் ஹசீஸ் போதைப் பொருள், பல இலட்சம் ரூபாய் பணம் மற்றும் மதுபானப் போத்தல் என்பன மீட்கப்பட்டுள்ளதோடு குறித்த கூலர் வாகனத்தின் சாரதி உற்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சச்சித்ர சேனாநாயக்க பிணையில் விடுதலை!

ஐ.ம.சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு

ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைப்பான போக்கில் தொழிற்சங்கங்கள்