உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலை அருகிலிருந்து 23 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்பு

அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் 23 வயதுடைய அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்‌ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

MV X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இடைக்கால இழப்பீடு

ஆறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பு!

மஹாபொலவை அதிகரிக்க நடவடிக்கை