விளையாட்டு

அதிரடியாக ஆடிய தோனியை அவுட்டாக்கமாட்டேன்… அடம்பிடித்த பந்து

(UTV|INDIA) ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற 12வது போட்டியில், ராஜஸ்தான் ரோயல் அணியை எதிர்க்கொண்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இப் போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது.

சென்னை சார்பில் அணித் தலைவர் மகேந்திரசிங் தோனி ஆட்டமிழக்காது 46 பந்துகளில் 4 ஆறு ஓட்டங்கள் 4 நான்கு ஓட்டங்கள் அடங்களாக மொத்தம் 75 ஒட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பதிலளித்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

போட்டியின் சிறப்பாட்டகாரராக மகேந்திரசிங் தோனி தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை முன்னதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 113 ஓட்டங்களினால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இருபது ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 231 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் பேர்ஸ்டோவ் 114 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பாடிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களையே பெற்று தோல்வி கண்டது.

Related posts

சுய தனிமைப்படுத்தப்பட்டார் கங்குலி

உலக கிண்ண போட்டியின் அரையிறுதி போட்டிக்கு 04 அணிகள் தெரிவு

மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றி…