சூடான செய்திகள் 1

அதிபர் போட்டி பரீட்சையில் கையடக்க தொலைபேசிகளுடன் மூவர்

(UTV|COLOMBO) மூன்றாம் தர அதிபர் தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டி பரீட்சையில் கையடக்க தொலைபேசிகளுடன் தோற்றியிருந்த புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பரீட்சாத்திகள் சம்பந்தமாக பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

புத்தளம் பாத்திமா பெண்கள் பாடசாலை பரீட்சை நிலையத்தில் பரீட்சை ஆரம்பமாவதற்கு சற்றுநேரத்திற்கு முன்னர் குறித்த மூவரிடமிருந்தும் கையடக்க தொலைபேசிகளை பரீட்சைகள் திணைக்களத்தின் கண்காணிப்பு குழு மீட்டுள்ளது.

நாடாளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டி பரீட்சையில் புத்தளம் மாவட்டத்தில் சுமார் 500 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

குறித்த பரீட்சாத்திகளுக்கு புத்தளம் – பாத்திமா பெண்கள் பாடசாலையில் மூன்று மண்டபங்களில் இந்த போட்டி பரீட்சை இடம்பெற்றுள்ளதோடு, இலங்கை ஆசிரியர் சேவையில் தற்போது சேவையாற்றும் ஆசிரியர் ஆசரியைகள் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

காலை 9.00 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவிருந்த நிலையில், அதற்கு முன்னர் அனைத்து பரீட்சாத்திகளுக்கும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் பரீட்சை தொடர்பில் அனைத்து விதிகளும் அறிவுறுத்தப்பட்டிருந்ததோடு, கையடக்க தொலைபேசிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

சிறைச்சாலைகளினுல் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுபடுத்த சிறைச்சாலைகளுக்கு STF

நாளை மறுதினம் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்