வகைப்படுத்தப்படாத

அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பர்வான் மாகாணத்தில் உள்ள சரிக்கார் நகரத்தில் அதிபர் அஷ்ரப் கானி இன்று தேர்தல் பிரசாரத்தில் பேசத் தொடங்கியபோது பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றிலிருந்து சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

இதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 30-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களில் தலைநகர் காபுலில் மற்றொரு சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

தொடரும் வர்த்தக போர் – புதிய வரி விதிப்பு – டிரம்ப் அச்சுறுத்தல்!

ஊவா மாகாண சபையில் அமைதியின்மை

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டம் விரைவில்