உள்நாடு

அதிசொகுசு பஸ் விபத்தில் சிக்கியது – 1 மணிநேர போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட பயணிகள்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த அதிசொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் இன்று (18) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ், முன்னால் சென்று கொண்டிருந்த சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளதாகவும், விபத்தில் பஸ்ஸின் நடத்துனர் , மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதி ஆகியோரே காயமடைந்துள்ளனர் எனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், கொடிகாம பொலிஸார் தெரிவித்துள்னர்.

அதேவேளை பஸ் விபத்துக்கு உள்ளானதால், பஸ்ஸின் வாயில் பக்கம் முற்றாக சேதமடைந்திருந்தமையால் பஸ்ஸினுள் இருந்த பயணிகளை சுமார் 1 மணிநேர போராட்டத்தின் பின்னரே மீட்டெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

FACEBOOK உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடங்கியது!

உதயங்க வீரதுங்கவிற்கு பிணையில் செல்ல அனுமதி

மேலும் 33 கடற்படையினர் குணமடைந்தனர்