விளையாட்டு

அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை சாடியோ சுவீகரித்தார்

(UTV|ஆபிரிக்கா ) – ஆபிரிக்க கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அதிசிறந்த வீரருக்கான விருதை செனகல் அணியின் சாடியோ மனே (Sadio Mane) சுவீகரித்துள்ளார்.

ஆபிரிக்க கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்த வருடாந்த விருது வழங்கல் விழா நேற்றிரவு இங்கிலாந்தில் நடைபெற்றது.

27 வயதான Sadio Mane கழகமட்ட போட்டிகளில் லிவர்பூல் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

முன்னாள் வீரரான El Hadji Diouf க்கு பின்னர் ஆபிரிக்க வீரர் விருதை வென்ற முதலாவது செனகல் வீரராகவும் இதன்போது Sadio Mane பதிவாகியுள்ளார்.

Related posts

பஞ்சாப்பை எளிதில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி

டிக்கெட் விற்பனை: SLC தனது முக்கிய தீர்மானங்களை அறிவித்தது

கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர் யார்?