சூடான செய்திகள் 1

அதிக வெப்பமான வானிலை…

(UTV|COLOMBO) இன்று(06) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நாட்டின் சில பிரதேசங்களில் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடமேல் மாகாணத்திலும், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், அநுராதபுரம், மொனராகலை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு அதிக வெப்பமான வானிலை நிலவக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 33 செல்சியஸ் அளவில் அதிக வெப்பநிலை பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி – அரசாங்க அதிபர்கள் இடையே விசேட கலந்துரையாடல்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று

எவன்கார்ட் சம்பவம்-விசாரிக்க தடை நீடிப்பு