உள்நாடுசூடான செய்திகள் 1

“அதிக வெப்பத்தால் இலங்கையில் ஒருவர் பலி”

கடும் வெப்பத்தால் ஒருவர் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த நபர் நேற்று (21) பிற்பகல் துவிச்சக்கர வண்டியை தள்ளும் போது தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ தெலிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையாவார்.

நாட்டையே பாதித்துள்ள கடும் வெப்பத்தால், கடும் வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு சுகாதார துறையினர் கடந்த காலங்களில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

இதேவேளை, பல பிரதேசங்களில் நேற்று (21) முதல் வறண்ட காலநிலை நிலவிய போதும், இன்று (22) பிற்பகல் கொழும்பில் கடும் மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அம்பாறை மஹாஓயா பிரதேசத்தில் 133.5 மி.மீ. அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஆனால் இந்த மழையுடனான காலநிலை 5 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வெப்பநிலை மீண்டும் உருவாகலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பல நீர் நிலைகளின் நீர் மட்டம் குறைந்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

சுதந்திரக் கட்சிக்கும் கோட்டாபயவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

க.பொ.த சாதாரணதர பரீட்சை மேலதிக வகுப்புக்கள் நடத்த தடை

எந்த சூழ்நிலையிலும் கைவிடப்படாது மக்கள் சேவை தொடரும் – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor