வணிகம்

அதிக விலையில் கோழி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை

(UTV|கொழும்பு) – அதிகூடிய சில்லறை விலைக்கு அதிகமாக கோழி இறைச்சி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கையில் நுகர்வோர் விவகார அதிகார சபையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதிக விலைக்கு கோழி இறைச்சியை வர்த்தகர்கள் விற்பனை செய்வதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, அதன் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தோல் நீக்கப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் உச்சபட்ச சில்லறை விலையாக 500 ரூபா நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ETI, சுவர்ணமஹால் நிறுவன வைப்பாளர்களுக்கு நட்டஈடு

பழ உற்பத்தி

அடுத்த இரு வாரங்களில் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை