உள்நாடுசூடான செய்திகள் 1

அதிகாரிகளுடனான குழு கூட்டத்திற்கு சஜித்திற்கு தடை : தனியாக அழைக்க அதிகாரம்

(UTV | கொழும்பு) –

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்ற குழு கூட்டங்களில் பங்கேற்கவோ கேள்விகளை எழுப்புவோ முடியாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு குறித்து, நாடாளுமன்றின் பொது நிதி குழுவில் நடைபெற்ற கூட்டத்தில் சஜித் பிரேமதாச பங்கேற்று இருந்தார்.இவ்வாறு நாடாளுமன்ற குழு கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்க முடியாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன் சீரமைப்பு குறித்து அரச அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பும் நோக்கில் தாம் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாகவும் குறிப்பாக ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பனவற்றுக்கு கடன் மறுசீரமைப்பில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து அறிந்து கொள்ளவே தாம் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார்.

அரசாங்க அதிகாரிகள் தமது கேள்விக்கு பதில் அளிக்க தவறினால் அது தனது சிறப்புரிமையை மீறும் வகையிலானது எனவும் அவ்வாறு சிறப்புரிமை மீறப்பட்டால் அதற்கு சபாநாயகர் பொறுப்பு எனவும் சஜித் சுட்டி காட்டியுள்ளார். இவ்வாறு அனுமதி வழங்கப்படாவிட்டால் தாம் தனியான குழு அமைத்து அரச அதிகாரிகளை அழைத்து கேள்வி எழுப்பப் போவதாக சஜித் கடும் தொனியில் சபாநாயகரிடம் கூறியுள்ளார். ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட வேண்டாம் என அவர் சபாநாயகரிடம் கோரியுளள்ளார்.

இதனைத் தொடர்ந்து அரச அதிகாரிகளை அழைத்து கேள்வி எழுப்ப அனுமதி வழங்குவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

VIDEO

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தவறான தகவல்களை பரப்பிய 57 பேர் மீது விசாரணை

புத்தாண்டில் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்கவும்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகள் தொடரும்