உள்நாடு

அதிகாரிகளின் அசமந்த போக்கு – ஹிங்குராங்கொடை பிரதேச கிராமங்களின் அவல நிலை

(UTV | கொழும்பு) – ஹிங்குராங்கொடை பிரதேசத்தில் உள்ள பல்வேறு கிராமங்களின் வீதி சீர் இன்மையினால் குறித்த கிராம மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

அக்கிராம மக்கள் நாளாந்தம் வேலைக்கு செல்வது மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நகரம் நோக்கி செல்வதற்காக குறித்த வீதிகளை பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது.

குறித்த வீதிகள் சீரமைக்கப்படாமையின் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் வயோதிபர்கள் பாரிய இன்னல்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதுடன் பாடசாலை மாணவர்கள் சில நாட்களில் குறித்த வீதிகளில் பயணிக்க முடியாமையினால் பாடசாலைக்கு செல்வதும் இல்லை என தெரிவிக்கின்றனர்.

நிலமையை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்த போதிலும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

பாதை புணர் நிர்மாணம் தொடர்பில் இருவேறு அரசியல் தலையீட்டின் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் ஐந்து தடவைகள் பாதை நிர்மாண செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் நிறைவுறா நிலையே காணப்படுகிறது.

தற்போது புணரமைக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட சில பாதைகள் கூட உரிய தரத்துடன் இல்லை என்பதுடன் கட்டப்பட்டுள்ள பாதைகள் இடிந்து வீழ்ந்துள்ளதாக குறித்த கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறித்த பாதையில் நீர் ஓடக்கூடிய நிலையில் இல்லை என்பதுடன் அதில் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக அங்கு டெங்கு நோய் பரப்பக்கூடிய நுளம்புகள் பெருக்கம் ஏற்படுவதுடன் நாட்டில் அதிவே வீதிகள் மற்றும் பிரதான வீதிகள் நிர்மாணிக்கப்பட்ட போதிலும் தமது கிராமத்தில் உள்ள வீதிகள் புணரமைக்கப்பட வேண்டுமென பல வருடங்களாக தாம் முன்வைத்த கோரிக்கை பூர்த்தி செய்யப்படாமையினால் கிராம மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

Related posts

30வயது இளம் தாய் சவூதியில் சித்திரவை : உடம்பு முழுவது குண்டூசிகள் மீட்பு

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

இன்று குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உயிரியல் பூங்காக்கள் இலவசம்