(UTVNEWS | COLOMBO) – யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு பொது நோக்கு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அரசயில் தீர்வு தொடர்பில் இரண்டு ஆண்டுகளில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதிகாரப் பகிர்வுக்காகவே முன்னரும் பாடுபட்டேன். இன்றும் பாடுபட்டு வருகின்றேன் என்றும் கூறினார்.
நானும் எமது கட்சியும் அதிகாரப்பகிர்விற்கு திடசங்கட்பம் பூண்டுள்ளோம். சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வை நாங்கள் கண்டறிய வேண்டும்.
நாங்கள் அதிகாரப்பகிர்வு தொடர்பில் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இது ஒரு சிக்கலான விடயமாகும்.
அத்துடன் அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஒரு நிலைப்பாட்டை எட்டுவதற்கு நேரம் நெருங்கி விட்டது. இதனைத் தொடர்ந்து நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் என கூறிக் கொள்வதில் பெருமைபடுவோம்.