உள்நாடு

அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணங்கள்!

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் இரண்டு வாரங்களில் பேருந்து கட்டணம் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து இன்று அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தனியார் பேருந்து சங்கங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், கட்டாயமாக இரண்டு வாரங்களுக்குள் கட்டணங்கள் உயர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 35 ரூபாயாக இருக்கும் என்றும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.மேலும், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.27

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்டதோர் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் – பிரதமர் ஹரிணி

editor

பட்டமளிப்பு நிகழ்வு குறித்து கொழும்பு பல்கலைக்கழகம் அறிக்கை