விளையாட்டு

அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த வீரர்

(UTV|இந்தியா) – உலகளவில் இணையத்தளம் மூலம் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

விராட் கோலிக்கு அடுத்தப்படியாக சிறந்த வீரராக ரோகித் சர்மா இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில உலக அளவில் இணையளத்தில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் அணிகள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.

இதன்படி, இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஜூன் வரை மாதத்திற்கு சராசரியாக 16.2 லட்சம் முறை தேடப்பட்டு முதல் இடத்தை பிடித்து்ளளார் விராட் கோலி.

ரோகித் சர்மா பெயர் சராசரியாக 9.7 லட்சம் முறையும், எம்.எஸ்.டோனி 9.4 லட்சம் முறையும், ஜார்ஜ் மெக்கே 9.1 லட்சம் முறையும், ஜோஷ் ரிச்சார்ட்ஸ் 7.1 லட்சம் முறையும், ஹர்திக் பாண்ட்யா 6.7 லட்சம் முறையும், சச்சின் தெண்டுல்கர் 5.4 லட்சம் முறையும், கிறிஸ் மேத்யூஸ் 4.1 லட்சம் முறையும், ஷ்ரேயாஸ் அய்யர் 3.4 லட்சம் முறையும் தேடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப \டுகின்றன.

இதேவேளை, அணிகளை பொறுத்தவரை இந்திய அணி சராசரியாக 2.4 லட்சம் முறை தேடப்பட்டுள்ளதுடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் முறையே .66, .33, .29, .23, .16, .12, .12, .09, .05, .04, மற்றும் .03 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளன.

Related posts

ஜெயசூர்யாவின் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால்! கிடைக்கும் தண்டனை இதுவா?

ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய 3வது வீரர்

ஆசிய கிண்ண கிரிக்கெட் – இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்