சூடான செய்திகள் 1

அண்மையில் இணைந்தவர்களை வேட்பாளராக்கினால் வெளியேறுவோம்; ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினர்கள்

(UTVNEWS | COLOMBO) – அண்மையில் கட்சியில் இணைந்தவர்களை வேட்பாளராக நியமித்தால் அரசியலிலிருந்து விலகிக்கொள்வோம்
என ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹேஷான் விதானகே மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனை குறிப்பிட்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியைச்சேர்ந்த ஒருவரே வேட்பாளராக நியமிக்கப்படவேண்டும். இது தொடர்பாக நாங்கள் கட்சியின் மேலிடத்துக்கு அறிவித்திருக்கின்றோம்.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக பொது வேட்பாளர் ஒருவரை இம்முறை நிய­மிக்க ஆதரவளிக்கமாட்டோம். தகுதியான வேட்பாளர்கள் கட்சிக்குள் இருக்கின்றனர்.

இதேவேளை, கடவத்தையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கவேண்டும் என தெரிவித்து 10 இலட்சம் கையொப்பங்கள் சேகரிக்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தவறான மருந்து  சீட்டால் பரிதாபாமக உயிரிழந்த குழந்தை

மாணவர்களில் 80 சதவீதமானோர் சமபோஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை

மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் செய்த காரியம்