விளையாட்டு

அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை நெருங்கிய யாரும் எதிர்ப்பார்க்காத முன்னாள் பிரபல வீரர்!!!

(UDHAYAM, COLOMBO) – இந்திய கிரிக்கட் அணிக்கான புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அனில் கும்ப்ளே பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்வதற்கான நேர்காணலை நேற்று இந்திய கிரிக்கட் ஆலோசனை குழு நடத்தியது.

இதன்போது ரவி சாஷ்த்திரி உள்ளிட்ட ஐந்து பேர் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் விரேந்தர் சேவாக், 2019ம் ஆண்டு உலக கிண்ணம் வரையில் இந்திய கிரிக்கட் அணியின் செயற்பாடுகள் தொடர்பில் முன்வைத்த யோசனைகள் வரவேற்கத் தக்கனவாக அமைந்ததாக கூறப்படுகிறது.

இதன்படி விரேந்தர் சேவாக் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் அணித் தலைவர் விராட் கோலியுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் தெரிவுக்கான ஒப்புதலை விராட் கோலியுடன் பகிரப் போவதில்லை என்றும், மாறாக விரேந்தர் சேவாக் முன்வைத்துள்ள யோசனைகள் குறித்து கோலிக்கு எடுத்துரைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம் பயிற்றுவிப்பாளர் விடயத்தில் செல்வாக்கு செலுத்த விராட் கோலி முயற்சிக்கக்கூடாது என்று சவுரவு கங்குலி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஹஃபீஸ் நீக்கம்

அசேல குணரத்ன இலங்கை அணியிலிருந்து நீக்கம்

ரியல் மட்ரியட் அணி, இலங்கைக்காக அஞ்சலி