அரசியல்உள்நாடு

அணர்த்தங்களுக்கான தீர்வுகளை நோக்கிய நகர்வுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது – அஷ்ரப் தாஹிர் எம்.பி

நேற்று (26) இரவு மாவடிப்பள்ளி வீதியில் மதரசா மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட சிறுவகளை மீட்கும் பணி இன்றும் தொடர்ந்து வருகின்றது.

நேற்று சம்பவத்தை கேள்வியுற்றவுடன் கடற்படையினரை தொடர்பு கொண்டு மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்புனர் அஷ்ரப் தாஹிர் கேட்டுக் கொண்டதற்கினங்க மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இன்று காலை (27) குறித்த சம்பவ இடத்திற்கு கள விஜயமொன்றை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடலினை மேற்கொண்டருந்தார்.

மேலும் குறித்த மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

-எஸ். சினீஸ் கான்

Related posts

மாத இறுதியில் கொரோனா தொடர்பில் கருத்து

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம், துறைமுக அதிகார சபையின் கீழ்

பசிலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி